கொரோனா தொற்று காரணமாக சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனையெடுத்து அதிக விலைக்கு கள்ள சந்தையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், அதற்கு மாறாக கள்ளச்சாராயம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கள்ளச் சாராயம் மற்றும் சட்டவிரோத மது விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வழுதியூர் பகுதியை சேர்ந்தவர் தங்கராசு ( 61 ). இவர் சாத்தமங்கலம் பகுதியில் உள்ள வயலில் கூலி வேலை செய்து வருகிறார். இதற்கிடையில் அப்பகுதியில் உள்ள வாழைத்தோட்டத்தில் சாராயம் காய்ச்ச தங்கராசு ஊறல் போட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அங்கு சென்ற திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் கவிதா தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 50 லிட்டர் சாராய ஊறல் இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் அவற்றை நிலத்தில் கொட்டி அழித்தனர். மேலும் சாராய ஊறல் போட்டிருந்த தங்கராசுவை கைது செய்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK
Comments