கொரோனா தொற்று 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த சில தளங்களுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து நேற்று முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுள்ளது. இதனால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக திருச்சி மாநகர பகுதிகளில் ஆங்காங்கே சட்டவிரோதமாக அதிக விலைக்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி வயலூர் ரோடு சீனிவாச நகரைச் சேர்ந்த போஸ் நாடார் செல்வம் என்பவர் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களை ஶ்ரீரங்கம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேல கொண்டையம் பேட்டையைச் சேர்ந்த பால்வாடி என்கின்ற பால வடிவேல் மற்றும் திருவானைக்காவல் அழகிரிபுறம் பகுதியை சேர்ந்த ராஜீ ஆகிய இருவரிடமும் அதிக விலைக்கு மது விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்கள் கொடுத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் 3 பேரிடம் இருந்து 720 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
போஸ், ராஜீ மற்றும் பால வடிவேல் ஆகிய 3 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களின் மொத்த மதிப்பு 86 ஆயிரத்து 400 ரூபாய் ஆகும். மூன்று பேரையும் கைது செய்த ஸ்ரீரங்கம் போலீசார் அவர்கள் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சொந்தப் பிணையில் விடுவித்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx
Comments