தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் 18 வயது முதல் 44 வயதுவரை உள்ள பயனாளிகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி முகாம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் இந்த தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
இதில் 18 வயது முதல் 44 வயது உள்ள பயனாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்துகின்றனர். முன்னதாக அவர்களுக்கு உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் கொண்டு வந்திருந்த அடையாள அட்டையை பதிவு செய்த பின்னர் அவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.
நீண்ட வரிசையில் நின்ற பயனாளிகள் கட்டாயம் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும், தனிமனித இடைவெளி பின்பற்றி இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை ஊழியர்கள் அறிவுறுத்தினர். அதுமட்டுமில்லாமல் இங்கு ஏராளமான பொதுமக்கள் வந்திருப்பதால் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx
Comments