Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

கொரோனா நோயாளிகளுக்காக சொகுசு காரை இலவச ஆம்புலன்ஸ் ஆக மாாற்றிய சமுக சேவகர்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த தாமரங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் மற்றும் பட்டுக்கோட்டையில் உள்ள இந்திரா காந்தி யூத் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவன தலைவரும் ஆவார். இவர் தன்னுடைய சொந்த பயன்பாட்டிற்காக 12 லட்சத்திற்கு வாங்கிய “கியா செல்டாஸ” என்ற சொகுசு காரை  தற்போது கொரொனா நோயாளிகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் ஆக மாற்றியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்… அடிப்படையில் நான் ஒரு விவசாயி என்பதால் கிராமப்புற ஏழை விவசாயிகளுக்கு ஏற்படும் பொருளாதார சிரமங்கள் என்ன என்பது எனக்கு நன்றாக தெரியும்.

கொரோனா காலத்தில் பலரும் வருமானமின்றி பாதிக்கப்பபட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு இந்த நோய் தொற்று ஏற்படும் பொழுது மருத்துவமனைக்கு செல்லும் அல்லது மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்ப பொதுமக்கள் ஆம்புலன்ஸ் வாடகை கொடுக்க முடியாமல் படும் சிரமத்தை வார்த்தைகளில் சொல்ல முடியவில்லை. எனவே அப்படிப்பட்ட மக்களுக்கு இலவச சேவை வழங்குவதற்காக எனது காரை இலவச ஆம்புலன்ஸாக மாற்றியுள்ளேன். இதில் ஆக்சிஜன் வசதி உள்ளது. பட்டுக்கோட்டை நீதிமன்றம் அருகே நிறுத்தி வைக்கப்படுள்ளது.

பட்டுக்கோட்டையில் இருந்து 30 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் தேவைப்படுவோர் ஜாதி, மத பேதமின்றி யார் வேண்டு மானாலும் 9940804447  என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு அழைத்தால் நோயாளிகளை வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு அல்லது மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு இலவசமாக அழைத்துச் செல்லப்படும்.
ஒரு விவசாயி ஆக என்னுடைய தேவையில் தாண்டி மக்களுடைய பயன்பாட்டிற்கு ஏதேனும் செய்ய முடியுமா என்று யோசித்த போது இந்த இதனை செய்ய முன் வந்தேன் இதற்கு குடுப்தினரும் துணையாக இருந்தனர்.

இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் இந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முத்து சம்பளம் வாங்காமல் மக்களுக்காக  பணியாற்றி வருகிறார். இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவையை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் நியூட்டன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதல் நாளிலேயே 2 இடங்களுக்கு இலவசமாக ஆம்புலன்ஸ் வசதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அனுப்புனோம். மக்களுக்காக செய்யும் இந்த சேவை மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என்கிறார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *