திருச்சி மாநகரில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொற்று தீவிரத்தை குறைக்கும் வகையில் சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. மூன்றாவது நாளாக நேற்றும் கலையரங்கம் திருமண மண்டபம், தேவர் ஹால், ஸ்ரீரங்கம் அரியமங்கலம், கோ- அபிஷேகபுரம், பொன்மலை கோட்டம் ஆகிய 4 கோட்ட அலுவலகங்கள் என மொத்தம் 6 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் பால் விற்பனையாளர்கள், நாளிதழ் தெரு வியாபாரிகள், மளிகை கடை பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள், மருந்தக ஊழியர்கள், வாகன ஓட்டுநர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பிரிவில் 18 வயது முதல் 44 வயது உட்பட்டவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இளைஞர்கள் நடுத்தர வயதினர் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர்.
இதேபோன்று மாநகர் முழுவதும் உள்ள 18 நகர்ப்புற சுகாதார மையங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இங்கு நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் தடுப்பூசித் எடுத்துக்கொண்டனர் மூன்றாவது நாளான நேற்று மட்டும் 6 முகாம்களில் 3 ஆயிரத்து 746 நபர்களுக்கும், 18 சுகாதார மையங்களில் 45 வயதுக்குட்பட்ட 1147 நபர்களுக்கும் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.
நேற்று ஒரே நாளில் மட்டும் மாநகரில் மொத்தம் 4 ஆயிரத்து 593 நபர்கள் தடுப்பு ஊசி செலுத்தி உள்ளனர். தொடர்ந்து இம்முகாம்கள் நடைபெறும் எனவும், பொதுமக்கள் எந்த தயக்கமும், அச்சமும் இல்லாமல் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx
Comments