திருச்சி அரசு மருத்துவமனையில் ரோட்டரி கிளப் சார்பாக 140 ஆக்சிஜன் செறிவூட்டிகள் சுமார் ஒரு கோடியே 60 லட்சம் மதிப்புள்ளவைகளை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆட்சித்தலைவர் சிவராசு முன்னிலையில் மருத்துவமனை முதல்வர் வனிதாவிடம் வழங்கினார்கள்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு… அரசு மருத்துவமனையில் கோவிட் தொற்று உடையவர்களின் உதவியாளர்கள் உடன் இருப்பதால் மேலும் தொற்று அதிகரிப்பதாகவும், அவர்கள் அரசு மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார். கட்சிக்காரர்கள் தடுப்பூசி மையத்திற்கு சென்று எவ்வளவு தடுப்பூசியில் கையிருப்பில் எவ்வளவு உள்ளது குறித்த தகவல்களை கேட்டு அவர்களை தொந்தரவு செய்யக் கூடாது அதற்காக பதில் அளிக்க மாவட்ட ஆட்சியர் இருப்பதாக குறிப்பிட்டார்.
முதல்வர் தொடங்கி வைத்த கோவிட் சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வந்துள்ளன. மேலும் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகளும் லால்குடி, தொட்டியம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட துவங்கியுள்ளது. 45 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மையங்களில் தடுப்பூசி இல்லை என்ற கேள்விக்கு முதல்வர் மத்திய அரசிடம் தடுப்பூசிகளை கேட்டுள்ளார் விரைவில் வந்துவிடும் என பதிலளித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx
Comments