திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள ஜமால் முகமது கல்லூரியும், நல் உள்ளங்கள் அறக்கட்டளையும் (முன்னாள்
ஜமால் கல்லூரி மாணவர்கள்) இணைந்து உருவாக்கிய ‘ஜமால் முகமது கல்லூரி
கொரோனா தடுப்பு உதவி மையத்தினை” மக்களை மீட்போம் !! காப்போம் !! என்ற
குறிக்கோளோடு அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தலைமையில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் 100 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பையை ஏழை மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், கொரோனா விழிப்புணர்வு
பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
உதவி மைய சிறப்புப் பணிகள். ஆதரவற்றோர்களுக்கு அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் இலவசமாக வழங்குதல், சாலையோர மற்றும் தேவையுடையோர்களுக்கு மதிய உணவு வழங்குதல், கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரம், ஆம்புலன்ஸ் உதவி எண்கள் போன்ற சிறப்புப் பணிகளையும், கொரானாவால் உயிரிழந்த நபர்களை நல்லடக்கம் செய்வதற்கான குழுவினர்ளகளின் எண்கள்,
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்து வழிகாட்டுதல், கொரோனாவால் பெற்றோர்களை இழந்த
குழந்தைகளுக்கு மாவட்ட அரசு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மையம் மூலம் வழிகாடடுதல், மருத்துவமனைகளின் தொடர்பு எண்கள் போன்ற சிறப்புப் பணிகள்
மேற்கொள்ளப்படுகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC
Comments