கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக திருச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 1993 படுக்கை வசதிகளுடன் கூடிய படுக்கைகளும், 1515 ஆக்சிஜன் வசதி அல்லாத படுக்கைகளும், 450 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் உள்ளன.
இதில் நேற்று ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளில் 1764 நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 229 படுக்கை காலியாக உள்ளன. ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளில் 909 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் 606 படுகைகள் காலியாக உள்ளது.
தீவிர சிகிச்சை பிரிவில் 427 நோயாளிகள் சிகிச்சையில் இருக்கிறார்கள். 23 படுக்கை காலியாக இருப்பதாக சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC
Comments