திருச்சி மாவட்டத்தை பொறுத்த அளவு நாளொன்றுக்கு 6 ஆயிரம் பேரிடம் இருந்து கோவிட் பரிசோதனைக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் திருச்சி மாநகராட்சியில் 56 பகுதிகளில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு அவர்களிடமும் மாதிரிகள் எடுக்கப்படுகிறது.
திருச்சியில் கடந்த ஒரு வாரமாக ஆயிரத்துக்கு மேல் 1500 க்குள் தொற்று எண்ணிக்கை வந்து கொண்டுள்ளது. 100 பேருக்கு மாதிரிகள் எடுக்கப்படும் பொழுது 19 பேருக்கு தொற்று உள்ளவர்களாக தற்பொழுது சதவிகிதம் உள்ளது. பொதுவாக பொதுமக்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்து தங்களுடைய மாதிரிகளை கொடுக்க பயந்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாதிரிகளை கொடுக்கின்றனர். அந்த மாதிரிகள் சரிவர திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆய்வகத்திற்கு வருவதில்லை. நாளொன்றுக்கு ஆய்வகத்தில் 4500 மாதிரி முடிவுகள் மட்டுமே அறிவிக்க முடிகிறது .அதுதான் துல்லியமான விரைவான முடிவாக இருக்கும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்காக 70க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் ஆய்வக உதவியாளர்கள் உள்ளிட்ட பணியில் ஈடுபடுகின்றனர். ஆர்டிபிசிஆர் கருவியும் போதுமானதாக உள்ளது .இதற்கு மேல் அதிகமாக மாதிரிகளை கொடுத்தால் துல்லியமான முடிவை கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கின்றனர். ஒருவரின் மாதிரி முடிவுகள் 6 மணிநரத்தில் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தொற்றுக்கான அறிகுறி உள்ளவர்களுக்கு மாதிரிகள் எடுத்து கொடுப்பதால் விரைவாக முடிவுகளைப் பெறலாம். அனைவருக்கும் எடுக்கும்பொழுது தொற்று உள்ளவர்களுடைய மாதிரிகள் இதனுடன் கலந்து முடிவு கொடுப்பதில் தாமதம் ஆகிறது. ஆனால் திருச்சி அரசு மருத்துவமனையில் கொடுக்கும் மாதிரிகள் 24 மணி நேரத்தில் முடிவுகள் வருகிறது .
இதற்காக தனி இணையதள முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் எடுக்கும் மாதிரிகள் ஆய்வகத்துக்கு சரியாக வருவதில்லை என்று மருத்துவரிடம் குற்றச்சாட்டும் வருகிறது.
இதுமட்டுமல்லாது திருச்சியில் இரண்டு தனியார் கோவில் மாதிரி பரிசோதனை கூடங்கள் செயல்படுகிறது அவற்றில் 48 மணி நேரம் கழித்து
முடிவுகள் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC
Comments