திருச்சி மாவட்டம் முசிரி தாலுக்கா தண்டலை புத்தூர் பகுதியின் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் சுதா. இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம். இவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், விஏஒ சுதாவிற்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியானது.
இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று சுதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
முசிறி தாலுகாவை சேர்ந்த பெண் கிராம நிர்வாக அலுவலர் கொரோனா நோய் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இறந்த சம்பவம் வருவாய்துறை அலுவலர்கள் முசிரி பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC
Comments