கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு திருச்சி மாநகரில் கடுமையாக அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் மீது சட்டரீதியான வழக்கு மட்டும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று ஊரடங்கு உத்தரவை மீறி திருச்சி மாநகரில் சுற்றி திரிந்த 358 இருசக்கர வாகனமும் , 9 மூன்று சக்கர வாகனமும், 1 நான்கு சக்கர வாகனம் என மொத்தம் 368 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் முக கவசம் மற்றும் தனிமனித இடைவெளி பின்பற்றாத 183 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 38 ஆயிரத்து 100 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC
Comments