திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியில் ஜுன் 7ம் தேதி முதல் 11ஆம் தேதி வரை “அறிவாற்றல் வானொலி ஆன்டெனாக்கள் மற்றும் மில்லி மீட்டர் அலை தொடர்பு” (CRAMWC) என்ற தலைப்பில் ஐந்து நாட்கள் இணைய வழியில் தேசிய அளவிலான AICTE பயிற்சி மற்றும் கற்றல் (ATAL) அகாடெமியின் கல்லூரி ஆசிரியர் மேம்பாட்டு திட்டத்தினை கல்லூரியின் எலக்ட்ரானிக்ஸ் துறையில் ஏற்பாடு செய்திருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நாடு முழுவதும் 200 பங்கேற்பாளர்கள் ஏற்கனவே முன்பதிவு செய்துள்ளனர். நாடு முழுவதிலிருந்தும் தலைசிறந்த பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார்கள்.
இந்த பயிற்சியில் குறிப்பாக எலக்ட்ரானிக்ஸ் துறை சார்ந்த பேராசிரியர்கள், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் முதுகலை மாணவர்கள் என அனைவரும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve
Comments