Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

கல்லூரி மாணவர்களிடம் ரூபாய் 28.50 லட்சம் மோசடி செய்த 3 பேர்

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஆனந்தி, வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த சையது பாரூக், மற்றும் மனோஜ் குமார் ஆகிய மூவரும் இணைந்து மதுரை காளவாசல் அருகில் பொன்மேனியில் FLY World Shares OPC Pvt Ltd என்ற நிறுவனத்தை நடத்தி வந்துள்ளனர்.

ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டிங்கில் கல்லூரி மாணவர்களை கவரும் வண்ணம் ஆசையை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் விளம்பரங்களை செய்து உள்ளனர். இதை பார்த்து வரக்கூடிய மாணவர்களை திருச்சி உள்ளிட்ட பிரபல நட்சத்திர ஹோட்டலில் மீட்டிங் வைத்து அவர்களை நம்பும் வகையில் பேசி முதல் தவணையில் 50,000 செலுத்தச் செய்துள்ளனர்.

பின்னர் அவர்களுக்கு லாபம் கிடைப்பது போல் இரண்டு மாதங்கள் மட்டும் சிறிது பணம் திரும்ப கொடுத்துள்ளனர். மேலும் இதேபோன்று அதிக மாணவர்கள் இந்த ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டிங்கில் சேர்ந்ததையெடுத்து சில தினங்களுக்கு பிறகு அந்த நிறுவனத்திலிருந்து எந்த தகவலும் வரவில்லை.

இதனால் ஷேர் மார்க்கெட்டில் சேர்ந்த மாணவர்கள் மதுரை சென்று அலுவலகத்தை பார்த்த போது பூட்டி இருப்பது தெரிய வந்தது. ஆனந்தி, சையது பாரூக், மற்றும் மனோஜ் குமார் தொடர்பு கொள்ள முயற்சித்த பொழுது அவர்களது தொடர்பு எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து தாங்கள் ஏமாற்றம் செய்யப்பட்டதை உணர்ந்த 20க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து புகார் கொடுத்தனர். இணையதளம் மூலம் கல்லூரி மாணவர்களை ஏமாற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *