Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

நாம் தமிழர் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் நிர்வாகி சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 4 பேர் கைது

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே, சமூக வலைத்தளங்களில் மூத்த தலைவர்களை ஆபாசமாக சித்தரித்து பல்வேறு வீடியோக்களை வெளியிடும் சம்பவம் நடைபெற்று வந்தது. அதில் குறிப்பாக சாட்டை துரைமுருகன் என்பவா் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவா்களையும், மிக மோசமாக சித்தரித்து வெளியிட்டு இருந்தார். அவர் மீது திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞா் புகார் மனு ஒன்றை கொடுத்திருந்தார். அதேபோல் திருடர் கழகத்தின் 3வது புலிகேசி என்ற தலைப்பின் உதயநிதி ஸ்டாலினை சித்தரித்து ஒரு வீடியோவும் பதிவிடப்பட்டுள்ளது.

இப்படி இன்னும் அநேக வீடியோக்கள் பலரை மோசமாகவும், கிண்டலாகவும் சித்தரித்து பதிவு செய்துயள்ளது. திமுகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல கண்டனங்கள் அவருக்கு எதிராக பரவியது.
ஆனால் கடந்த சில தினங்களாக சமர் கார் ஸ்பா என்ற நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் அதன் உரிமையாளா் வினோத் தமிழ் ஈழத்திற்காக போராடிய பிரபாகரைனையும், அவருடைய கொள்கையையும் குறித்த தவறுதலாக குறிப்பிட்டு பதிவுகள் வெளியாகியது.

இதை பார்த்து அதற்கு பதில் அளித்த சாட்டை துரைமுருகன் மீண்டும் தன்னுடைய பங்கிற்கு பிரபாகரனை தவறாக பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்து பல பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
ஆனால் இருவருக்கும் இடையே கருத்து மோதல்கள் முற்றிய நிலையில், சாட்டை துரைமுருகன், நாம் தமிழா் கட்சியின் திருச்சி மேற்கு மாவட்ட செயலாளர் வினோத், மாநில தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாளர் சந்தோஷ், என்ற மகிழன், மாநில கொள்கை பரப்புரையாளா் திருச்சி சரவணன் உள்ளிட்ட 4 பேர் சமர் கார் ஸ்பா என்ற நிறுவனத்திற்கு சென்று பிரபாகரனை தவறுதலாக பேசிய வினோத்தை நேரில் சந்தித்து பேசியேதோடு, காவல்துறையினர் முன்னிலையில் தவறுதலாக பேசிய வினோத்தை மறுப்பு காணொளி மூலம் மன்னிப்பு கேட்க வைத்துள்ளனா்.

இந்நிலையில் கே.கே.நகர் காவல்துறையினர் சாட்டை துரைமுருகன் மற்றும் அவருடன் சென்று சமர் கார் ஸ்பாசவில் சென்று மிரட்டல் விடுத்த 4 பேர் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்தது. அவர்கள் மீது பிரிவு 147 – கலகம் செய்யுதல், பிரிவு 148 –கலகம் செய்யும் போது பங்கரமான ஆயுதங்களை வைத்திருந்தது. பிரிவு 447 – அத்துமீறி நுழைதல், 294(பி) – பிறருக்கு தொல்லை தரும் வகையில் பொது இடத்தில எந்த ஆபாசச் செயலைப் புரிந்தல், 506 (1) – குற்றம் கருதி மிரட்டல், உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட நான்கு பேருக்கு திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *