கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஒரு மாதங்களுக்குப் பிறகு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதில் குறிப்பாக தேனீர் கடை மற்றும் டீக்கடைகள் நேர கட்டுப்பாடுடன் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி டாஸ்மாக் மதுபான கடை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இந்நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய சுற்றறிக்கையை பணியாளர்களுக்கு அனுப்பி உள்ளது.
மேலும் மதுபானம் வாங்க வருபவர்கள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். பணியாளர்கள் கிருமி நாசினி, முக கவசம், கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும். இதன் தொடர்ச்சியாக மதுபான வாங்க வருபவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்காக தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மதுபானம் வாங்குபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும் என சில கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve
Comments