மேட்டூர் அணையில் 12ஆம் தேதி திறந்து விடப்பட்ட 10 ஆயிரம் கன அடி காவிரி நீரனது திருச்சி முக்கொம்புயை வந்தடைந்தது. திருச்சி மாவட்ட விவசாய சங்கத்தினர் காவிரி நீரை வரவேற்கும் விதமாக பூஜைகள் செய்து வணங்கி நெல்மணிகளை, மலர்களையும் நீரில் தூவி வரவேற்றனர்.
முன்னதாக அங்கு உள்ள சிலைகளுக்கு மாலை அணிவித்து பூஜை செய்தனர். திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 14 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொள்ள விவசாயிகள் தயார் நிலையில் உள்ளனர் . தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு முதலிலேயே கடனுதவியும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர்.
காவிரி நீரானது கல்லணை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. நாளை கல்லணையில் இருந்து டெல்டா மாவட்ட விவசாய நிலங்களுக்கு நீர் திறந்து விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve
Comments