திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி சார்பாக கொரோனா நிவாரண நல உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வு கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றது. கொரோனா நிவாரண நல உதவித் திட்டத்தை திருச்சி மாவட்ட கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், 10 பயனாளிகளுக்கு வழங்கி நிகழ்ச்சியை கல்லூரி அலுவலகத்தில் தொடங்கி வைத்தார்.
முன்னதாக கல்லூரியின் முதல்வர் அருட்திரு. முனைவர் ஆரோக்கியசாமி சேவியர் சே.ச செப்பர்டு விரிவாக்கத் துறை பணி செய்யும் 67 கிராமங்கள் மற்றும் 16 நகர்ப்புற குடிசைப் பகுதியிலிருந்து மாற்றுத்திறனாளிகள், விதவைகள் கைவிடப்பட்ட முதியோர், ஆதரவற்ற குழந்தைகள் இதுபோன்ற ஆயிரம் நபர்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொருவருக்கும் தலா இரண்டாயிரம் ரூபாய் வீதம் 20 லட்சம் தொகையை கல்லூரி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளன என்பதை தெளிவாக விவரித்தார்..
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் அதிபர் தந்தை முனைவர் லியோனார்டு சே.ச, செயலர் தந்தை பீட்டர் சே.ச, செப்பர்டு விரிவாக்கத்துறை இயக்குநர் தந்தை பெர்க்மான்ஸ் சே.ச, சேசு சபை அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். கல்லூரியின் துணை தலைவர் டாக்டர் k.அலெக்ஸ் கூறுகையில்,
பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 கிராமப்புற மக்களுக்கு நேரடியாக உதவிகள் சென்று சேர வேண்டும் என்ற இத்திட்டத்தை செயல்படுத்தினோம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளும்
ரூபாய் 2000 தங்களது கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக பயனாளிகள் அனைவரும், தங்களது தொலைபேசி வழியாக தெரிவித்தனர் என்றும் கூறினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve
Comments