சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி விமான நிலையம் வந்தது. அதில் பயணித்த பயணிகளை சுங்கத்துறை மற்றும் குடியுரிமை பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது கடலூர் மாவட்டம் திட்டக்குடி சேர்ந்த ராமசாமி (47) என்பவர் மாரிமுத்து என்ற பெயரில் போலி பாஸ்போர்ட் பெற்று சிங்கப்பூர் சென்றதும், அங்கு கடந்த 2005ஆம் ஆண்டு முதல் கம்பி கட்டும் வேலை செய்து வந்ததும் குடியுரிமை பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து ராமசாமியை ஏர்போர்ட் போலீசார் கைது செய்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF
Comments