Saturday, August 16, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

நாளை 18.06.2021 அடையாள போராட்டம் – அகில இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக கிளையின் தலைவர் அறிவிப்பு.

உலகை அச்சுறுத்தும் கொரோனா இரண்டாம் அலையில் முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள் என பலரும் நோய்தொற்றை கட்டுப்படுத்த தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இதனிடையே திருச்சி இந்திய மருத்துவ மன்றத்தின் திருச்சி கிளையில் அகில இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக கிளையின் தலைவர் ராமகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார்.

அதில் தமிழ்நாட்டில் 42 மருத்துவர்கள், இந்தியா முழுவதும் இதுவரை 1,427 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனிடையே சிகிச்சை பலனின்றி நோயாளி உயிரிழந்த சூழலில் கொரோனா தடுப்பு பணிகளில் தங்களை ஈடுபடுத்தி உள்ள மருத்துவர்கள் மீதான வன்முறைகளைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி, மருத்துவர்களின் பாதுகாப்பிற்கு வலிமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருத்துவமனை மற்றும் மருத்துவத்துறைப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். ஒவ்வொரு மருத்துவமனைக்கும் உறுதியான பாதுகாப்பு வேண்டும். மருத்துவமனையைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். மருத்துவப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் விரைவாகவும், பெயிலில் வர முடியாதவாறு கடுமையாகவும் தண்டிக்கப்பட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை 18ஆம் தேதி தேதி கறுப்புப் பட்டை அணிந்து நோயாளிகளுக்கு இடையூறு இன்றி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

2008ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசாணையின்படி மருத்துவர்கள் மீதான தாக்குதலுக்கு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. 4275 மருத்துவமனைகளிலிருந்து இந்திய மருத்துவ சங்கத்தில் பதிவு பெற்ற 37 ஆயிரம் மருத்துவர்கள் நாளைய தினம் போராட்டத்தில் பங்கெடுப்பர் என்றும் தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *