திருச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் வசிக்கும்
குழந்தைகளின் பெற்றோர்கள் யாரேனும் கொரோனோ தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தால் அக்குழந்தைகளின் பாதுகாப்பு,
பராமரிப்பு தேவைகள் மற்றும் ஆலோசனைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை அல்லது மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
அக்குழந்தைகளுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைகள் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட அளவிலான குழு உறுப்பினர்கள் மூலம் மேற்கொள்ளப்படும்.
எனவே, பொதுமக்கள் இது தொடர்பாக இலவச தொலைபேசி எண் 1077, மாவட்ட சமூகநல அலுவலகம் தொலை பேசி எண் : 0431-2413796, இளநிலை உதவியாளர், மாவட்ட சமூக நல அலுவலகம் கைப்பேசி எண் : 9942055389 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF
Comments