திருச்சி VDart நிறுவனம் சார்பாக அவர்களது ஊழியர்கள் தடுப்பூசி முகாமுக்கு ஆர்வமுடன் வந்தனர். இந்த முகாம் தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் நடந்தது.நேற்று(18.06.2021) காலை 10 மணியிலிருந்து 2 மணி வரை வீட்டில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போடுவதற்கு முன் பதிவு செய்திருந்தனர் .அது மட்டுமல்லாமல் அவர்களது குடும்பத்தினரும் ஊழியர்களுடன் வந்து ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
VDart ஊழியர்கள் 180க்கும் மேற்பட்டோரும் பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர். தடுப்பூசி முகாம்க்கு வரக்கூடிய ஊழியர்கள் அனைவருக்கும் சானிடைசர் கொடுக்கப்பட்டு உடல் வெப்பநிலையை சோதனை செய்யப்பட்டு மருத்துவ ஆலோசனையுடன் தடுப்பூசி போடப்பட்டது.
தடுப்பூசி போட பொதுமக்கள் தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்துக் கொண்டு தற்போது செலுத்தி வரும் நிலையில் VDart ஊழியர்கள் தடுப்பூசி முகாமில் வரிசையில் பொதுமக்களுடன் நின்று போட்டு கொண்டனர். தடுப்பூசி முகாமுக்கு கொண்டு வந்த ஒரு மருந்து கூட வீணாகமல் அனைத்தும் போடப்பட்டது. சுகாதாரத்துறை துணை இயக்குனர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF
Comments