சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜூன் 21 இன்று திருச்சி தேசிய கல்லூரியில், தேசிய நாட்டு நலப்பணித்திட்ட குழு யோகாகலையை மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக கலைமாமணி ஸ்ரீ ராமசுவாமி கலந்து கொண்டு யோகா குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டதோடு மாணவர்களுக்கு செய்முறை விளக்கத்தையும், செய்து மாணவர்கள் யோகா செய்ய வேண்டிய முக்கிய காரணத்தையும் அதற்கான பலன்களையும் விளக்கியுள்ளார்.
கொரோனா காலகட்டத்தில் பின்பற்ற வேண்டிய அனைத்து முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றி கல்லூரியின் யோகா அரங்கில் காலை 7 மணி முதல் 8 மணி வரை நடைபெற்றது. இந்நிகழ்வில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF
Comments