திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உயிரிழந்த விஜய் நற்பணி இயக்க நற்பணி இயக்க நிர்வாகி குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கியும், அவரது குழந்தைகளின் கல்வி செலவினை நடிகர் விஜய் நற்பணி இயக்க ஏற்பது விழா நடைபெற்றது.
நடிகர் விஜய் நற்பணி இயக்க லால்குடி ஒன்றிய தலைவராக அப்பாவு (40) பதவி வகித்தார். தின கூலியாக வேலை செய்யும் இவருக்கு மனைவி மற்றும் 10 வயதிற்குட்பட்ட 3 குழந்தைகள் உள்ளனர். அப்பாவு அண்மையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். தற்போது இவரது மனைவிக்கு போதிய வருவாய் இல்லாததால், குழந்தைகள் வளர்ப்பதில் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வந்துள்ளார் அவரது மனைவி.
இதனை அறிந்த விஜய் நற்பணி இயக்கத்தினர் உயிரிழந்த அப்பாவு குடும்பத்தினருக்கு வாளாடியில் உள்ள நற்பணி மன்ற அலுவலகத்தில் நிதி உதவி வழங்கும் விழா நடைபெற்றது. உயிரிழந்த அப்பாவு மனைவிக்கு இந்திய அஞ்சலகத்தில் ரூபாய் 20 ஆயிரம் வைப்புக் தொகையாக வைத்த அஞ்சலக புத்தகம் மற்றும் ரூபாய் 5 ஆயிரம் மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கிய தெற்கு மாவட்ட தலைவர் த.கரிகாலன் மூன்று குழந்தைகளின் படிப்பு செலவினையும் ஏற்பதாக உறுதி அளித்தார்.
விழாவில் மத்திய மாவட்ட தலைவர் கார்த்திக், மாவட்டசெயலாளர் ராஜா, துணைத் தலைவர் கலை, ஒன்றிய தலைவர்கள் ராஜா (மேற்கு ) நவீன் ( கிழக்கு ) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF
Comments