கொரோனா முதல் அலையைக் காட்டிலும் இரண்டாவது அலையில் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகரித்து காணப்பட்டது. முக்கவசம், சமூக இடைவெளி மற்றும் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்துவதன் மூலம் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதன் மூலமும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் முடியும் என மத்திய அரசு மற்றும் சுகாதாரத்துறை வலியுறுத்தி வந்ததன் பேரில் தமிழகத்தில் மக்களிடம் தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டு தடுப்பூசி போட ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஏற்கனவே 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள், 18 முதல் 45 வயதிற்குட்பட்டோர் என பல பிரிவுகளாக முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இன்றையதினம் கொரோனாவால் அனைத்து வயதினரும் பாதிக்கப்படும் நிலையில் பாலூட்டும் தாய்மார்கள் கூட்டத்தில் நின்று தடுப்பூசி போட்டுக்கொள்வதை தவிர்க்க திருச்சி மாநகராட்சி சார்பில் பாலூட்டும் தாய்மார்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது.
மாலை 5 மணி வரை நடைபெறும் இம்முகாமில் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 18 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஏராளமான பாலூட்டும் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுடன் வந்திருந்து தடுப்பூசியினை போட்டுக்கொண்டு சென்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF
Comments