திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட ராம்ஜிநகர் பகுதியில் தொடர்ந்து கஞ்சா வியாபாரம் அதிகரித்து வருவதாக காவல்துறையினருக்கு அடிக்கடி தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் கடந்த இரு வாரங்களில் கஞ்சா வியாபாரிகள் இருவர் கொலை செய்யப்பட்டனர்.
மேலும் அடிக்கடி அங்கு தகராறு நடைபெறுவதாகவும் போலீசாருக்கு புகார் வந்துள்ளது. இதனையெடுத்து கஞ்சா வியாபாரிகள் குறித்து ராம்ஜிநகர் ஊர் தலைவர் அமர்நாதன் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் நியூ காட்டூரிலுள்ள அமர்நாதன் வீட்டில் இருந்த போது பட்டப்பகலில் யுவராஜ், மாமலைவாசன், அருண்குமார் 3 பேர் சரமாரியாக அடித்ததில் முகம், தலை பகுதியில் ரத்தகாயம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து படுகாயம் அடைந்த ராம்ஜிநகர் ஊர் தலைவர் அமர்நாதனை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த தாக்குதல் குறித்து ராம்ஜி நகர் போலீசார் விசாரணை நடத்தி தாக்குதல் நடத்தி 3 பேரை தேடி வருகின்றனர்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KgXsKw3fBDuFxT4NQiE2BW
Comments