திருச்சி மாநகராட்சியில் பொது நிதியின் மூலமாக சாலை பராமரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். சாஸ்திரி ரோடு, தில்லை நகர், மெயின் ரோடு, அண்ணா நகர் மெயின் ரோடு, சிவப்பிரகாசம் ரோடு ஆகிய பகுதிகளில் புதிய சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டனர்.
ஆனால் பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகம் அரசின் அறிவுரைகளையும் பின்பற்றாமல் மீண்டும் சாலைகளை அமைக்கும் போது அதனுடைய உயரத்தை மாற்றி அமைத்தாக கூறப்படுகிறது. மேலும் சாலை போடும் போது மேற்தள கட்டுமானத்தைச் சுரண்டி எடுத்துவிட்டு அதே அளவுக்கு மேற்தளம் போட வேண்டும்.
மேற்பரப்பைச் சுரண்டிவிட்டு சாலை போடுவது வீடுகளுக்குள் நீர் புகாமல் தடுக்கும். ஒவ்வொரு முறையும் சாலைகளை அமைக்கும் போதும் ஏற்கெனவே உள்ள சாலை மீதே புதிய சாலைகள் போடப்படுகின்றன. இதனால் சாலைகள் தரமில்லாதவையாக உள்ளன. மேலும் சாலைகளின் உயரம் அதிகரித்து வீடுகளின் உயரம் குறைகிறது. இதனால் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன.
தலைமை செயலாளர் வெ.இறையன்பு அறிவுறுத்திய அறிவுரைகளை பின்பற்றாமல் திருச்சி மாநகராட்சி செயல்பட்டு உள்ளதாகவும், ஏற்கனவே கண்டோன்மென்ட் ராயல் ரோடு பணியின் போதும் திருச்சி மாநகராட்சி நிர்வாகம் இப்படித்தான் செயல்பட்டது என்று அப்பகுதி குடியிருப்புவாசிகள் கூறிகின்றனர்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில் சாலை மூன்று சென்டிமீட்டர் அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சேதமடைந்த சாலைகளை பராமரிக்கும் போது மேற்பரப்பை சுரண்ட வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளனர்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KgXsKw3fBDuFxT4NQiE2BW
Comments