திருச்சி ஸ்ரீரங்கம் சங்கர்நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி நவீன்குமார். பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையவர் கடந்த 8ஆம் தேதி இவர் நண்பர்களுடன் கொள்ளிட கரையில் மது அருந்தியதாக தகவல் கிடைத்தது. அதன் பிறகு அவரை காணவில்லை அவருடைய தந்தை தனது மகனை கண்டுபிடித்து தருமாறு ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணையை தொடங்கினர் அவருடன் நெருக்கமாக இருந்த 7 க்கும் மேற்பட்டவர்களை விசாரணை வளையத்தில் கொண்டு வந்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி எந்த தகவலும் கிடைக்கவில்லை .நேற்று மீண்டும் தீவிர விசாரணையை தொடங்கிய நிலையில் கடந்த 8ஆம் தேதி இவர்கள் அனைவரும் மது அருந்தும் போது நவீனுக்கும் இவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது அடித்துக் கொன்று கொள்ளிடக் கரையில் புதைத்துள்ளதாக தகவல் தெரிவித்தனர்.
கொலைக்கான காரணம் குறித்து அவர்களிடம் கேட்டபோது இவர்களுடன் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் மனைவிகளை தொடர்ந்து மிரட்டி அவர்களுடன் உறவு வைத்துக் கொண்டதால் அதனை தட்டிக் கேட்டும் அவர் தொடர்ந்து மிரட்டியதால் கொலை செய்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் முன்பு காவல்துறையினர் அவர் உடலை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் ஒரு ரவுடி வீட்டு விசேஷத்திற்காக பார்ட்டி வைப்பதாக அவரை கொள்ளிட கரைக்கு அழைத்து தான் கொலை சம்பவத்தை நிகழ்த்தியதாக தெரியவந்துள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC
Comments