திருச்சி மாவட்டம் முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முசிறி கல்வி மாவட்ட அலுவலர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்குள்ள குடோன் ஒன்றில் முசிறி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக இலவச பாடப்புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்து பல்வேறு பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் தொடர்ந்து அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த குடோனில் கடந்த ஆண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட புத்தகப் பைகள் வழங்கியது போக மீதமுள்ள புத்தக பைகள் அடங்கிய மூட்டைகளும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புத்தக குடோனில் இருந்து புகை மூட்டம் வெளியேறியது.
இதனை கண்ட முசிறி கல்வி மாவட்ட அலுவலர் செல்வி முசிறி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை மேலும் பரவாமல் தண்ணீரை பீச்சி அடித்து அணைத்தனர். இந்த தீ விபத்தில் கடந்தாண்டு வழங்கியது போக எஞ்சியிருந்த பிளாஸ்டிக் பைகள் மின்கசிவு காரணமாக தீ பிடித்து எரிந்தது தெரியவந்தது.
இதற்கிடையில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கிட வைத்திருந்த புத்தகங்கள் அங்கிருந்து பத்திரமாக அகற்றப்பட்டது. தீ விபத்தில் அதிஷ்டவசமாக பாட புத்தகங்கள் தப்பியது. தீ விபத்து காரணமாக அங்கு சற்று நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து முசிறி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC
Comments