Saturday, August 16, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

இறைச்சி மற்றும் மீன் கழிவுகளை மறுசுழற்சி செய்ய தொடங்கியுள்ள திருச்சி மாநகராட்சி

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலத்தில் உள்ள இறைச்சி மற்றும் கடல் உணவு  கடைகளில் உள்ள மீன் மற்றும் கோழி கழிவுகளை மறுசுழற்சி செய்ய திருச்சி மாநகராட்சி தொடங்கியுள்ளது. 4 மண்டலங்களிலும்  ஒவ்வொன்றிலும் 150 கடைகளை கொண்டு சுமார் ஒரு மண்டலத்திற்கு ஒரு நாளைக்கு   1.5 முதல் 2 மெட்ரிக் டன் கோழி மற்றும் மீன் கழிவுகள் உருவாகின்றன. 

ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு மண்டலத்திற்கு 3 மெட்ரிக் டன் வரை உயர்கின்றது. ஒரு சில கடைகள் மைக்ரோ கம்போஸ்ட் மையங்களில் கழிவுகளை ஒப்படைத்துக் கொண்டிருக்கின்றனர். பெரும்பான்மையான இறைச்சி மற்றும் மீன் கடைகள் கழிவுகளை பொது இடங்களிலும் நீர்நிலைகளிலும் கொட்டப்பட்டு வருகின்றது. இதனை தடுக்கும் முயற்சியாக இந்த மறுசுழற்சி முறையை தொடங்கியுள்ளனர். 

திண்டுக்கல் தளமாகக் கொண்ட மறுசுழற்சி பிரிவை மாநகராட்சி இதில் ஈடுபடுத்தியுள்ளது. அக்வா பண்ணைகளில் வளர்க்கப்படும் மீன்கள் தீவனமாக இந்த கழிவுகளை மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மைக்ரோ கம்போஸ்ட் மையங்களில் சேகரிக்கப்படும் கோழி கழிவுகளை சேமிக்க நிறுவனம் தொட்டிகளை வழங்கியுள்ளது.

கோழி கழிவுகளை திறந்த வெளியில் கொட்டினால் பிடிபட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோழி மற்றும் மீன் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்காக தனியார் நிறுவனத்திற்கு அனுப்பும் செயல்முறை நகரத்தில் 30க்கும் மேற்பட்ட எம்சிசி களின்  சுமையை குறைத்துள்ளது.

தொழிலாளர் குடியிருப்புகளில் உள்ள கழிவுகளை சேகரிப்பதில் இன்னும் கவனம் செலுத்துகின்றனர். கோழி கழிவுகளை குடியிருப்பு வளாகங்கள் அருகே கொட்டுவது தொடர்பான புகார்கள் குறைந்துள்ளன. மாநகராட்சி நிர்வாகமே மறுசுழற்சிகாண மொத்த பொறுப்பையும் ஏற்று உள்ளதால் கடைக்காரர்களுக்கு எவ்வித செலவும் இல்லை என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *