தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் தண்ணீர் திறந்து விடப்படும் மதகுகளில் சடலமொன்று அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் இறந்து கிடப்பது ஆணா பெண்ணா? என்பதை அடையாம் காண முடியாத நிலையில் உள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும், நிகழ்விடத்திற்கு வரவில்லை என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
கடந்த 12ம் சம்பா சாகுபடிக்காக மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கல்லணையில் அதிகளவு தண்ணீர் உள்ளது. இதனால் இறந்த நிலையில் கிடக்கும் உடலால் தூர் நாற்றம் வீச தொடங்கி தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC
Comments