திருச்சியில் கோவாக்சின்
தடுப்பூசி செலுத்திக்கொண்ட பொதுமக்கள் தங்களுடைய இரண்டாவது தவணை தடுப்பூசிக்காக கிட்டத்தட்ட 3000 பேர் காத்திருப்பதாக திருச்சி மாவட்ட சுகாதாரத் துறை மதிப்பிட்டுள்ளனர். இரண்டாம் தவணைக்கான தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய காலம் முடிந்தும் காத்திருப்பது இரண்டு வாரங்களுக்கு மேலாக நீடிக்கிறது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கோவாக்சின் பக்கவிளைவு குறைவாக இருப்பதால் அதிக எண்ணிக்கையில் முதியவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வந்தனர். அதுமட்டுமின்றி இரண்டு தவனைக்குமான கால அளவு குறைவாக இருப்பதால் வெளிநாடு செல்பவர்களும் கோவாக்சின் போட்டுக் கொள்ள முன்வந்தனர். ஆனால் தற்போது நடைபெறும் கோவாக்சின் சிறப்பு முகாம்களில் கோவாக்சின் பற்றாக்குறை இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது.
கே.கே.நகரைச் சேர்ந்த தியாகராஜன் கூறுகையில்.. மாநகராட்சியால் தடுப்பூசி முகாம்கள் இல்லாததால் என்னுடைய இரண்டாவது தவணை தடுப்பூசி தனியார் மருத்துவமனையில் செலுத்தி கொண்டேன் என்றார். மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களை காத்திருப்பு பட்டியலில் அதிகமாக இருப்பதால் இரண்டாவது தவணை காத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் என்று சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. அடுத்து வரும் வாரங்களில் குறைந்தது ஆயிரம் நபர்கள் தடுப்பூசி போடப்பட்டு விடும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் திருச்சி மாநகராட்சி கலையரங்கம் மற்றும் தேவர் அரங்குகளில் கோவாக்சின் இரண்டாம் தவனை கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு சுகாதார மையங்களும் தங்கள் தொடர்பு என்னுடன் இரண்டாவது தவணை தடுப்பூசி காத்திருக்கும் நபர்களின் பட்டியலை தயாரித்துள்ள அடுத்த சில நாட்களில் ஒரு தொகுதிக்கு கிடைத்தபோது உடனடியாக பொதுமக்களுக்கு வழங்கப்படும். ஆனால் நாம் பெற வேண்டிய அளவு கோரிக்கையை நிவர்த்தி செய்ய போதுமானதாக இருக்காது என்றும் மூத்த சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC
Comments