திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் கோசாலைக்கு காணிக்கையாக பெறப்பட்ட கால்நடைகளில் உபரியாக உள்ள கால்நடைகளை கிராமபுறங்களில் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கால பூஜைத் திட்டத்தில் பணியாற்றும் திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
கம்பரசம்பேட்டை பகுதியில் உள்ள அய்யாளம்மன் படித்துறையில் ஶ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமான கோசாலையில் மொத்தம் 68 ஜோடி பசு மற்றும் கன்றுகளை விலையில்லாமல் 34 பயணாளிகளுக்கு ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
Comments