திருச்சி மாவட்டம் குண்டூரை சேர்ந்தவர் தனலட்சுமி. தடகள விளையாட்டு வீராங்கனையான இவர், சில மாதங்களுக்கு முன்பு தேசிய அளவில் நடந்த தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். இதனால் தனலட்சுமி ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்று டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் 4×400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் கலந்து கொள்கிறார்.
இதேபோல் சென்னை தமிழ்நாடு விளையாட்டு வளர்ச்சி ஆணைய விடுதியில் பயிற்சி பெற்ற திருச்சி திருவெறும்பூர் சேர்ந்த சுபா வெங்கடேசன் ஒலிம்பிக் கலப்பு 4×400 தொடர் ஓட்டப் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார்.
இதேபோல் திருச்சி லால்குடியைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ் 4×400 ஆடவர் தொடர் ஓட்டப் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளார்.
இந்த வகையில் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 2 வீராங்கனை உள்பட 3 பேர் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
Comments