திருச்சி மாநகரம், காந்தி மார்க்கெட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுசிலா கடந்த 17.06.2021 அன்று காலை 06.00 மணியளவில் காந்தி மார்க்கெட், சூரஞ்சேரி சரவணா அப்பார்ட்மெண்ட் பகுதியில் ரோந்து அலுவலாக சென்ற போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் வடக்கு தாராநல்லூர் காமராஜ் நகரைச் சேர்ந்த தேவா (27) என்பதும், அவரை சோதனை செய்ததில் அவரிடம் சுமார் 2 கிலோ 100 கிராம் கஞ்சா இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேற்படி வழக்கில் சம்மந்தப்பட்ட தேவா மீது ஏற்கனவே திருச்சி மாநகரம் கோட்டை காவல் நிலையத்தில் 7 வழக்கும், கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் 1 வழக்கும், காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் 17 வழக்கும் பதிவு செய்யப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
எனவே, மேற்படி தேவா, தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என விசாரணையில் தெரிய வருவதாலும், அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டும் காந்தி மார்க்கெட் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையின் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் ஆணையின்படி திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் தேவா இன்று (06.07.2021) குண்டர் தடுப்பு காவல் ஆணை சார்வு செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மத்திய சிறையில் அடைக்கப்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
Comments