Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மையத்தை திறந்ததுள்ளது ஏதர் எனர்ஜி நிறுவனம்

இந்தியாவின் முதல் நுண்ணறிவு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஏதர் எனர்ஜி நிறுவனம் தனது புதிய ஷோரூமை திருச்சியில் ஏதர் ஸ்பேஸ் என்ற பெயரில் தில்லை நகரில் வேலா ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து  நேற்று துவக்கி உள்ளது. ஏதர் எனர்ஜி நிறுவனத்தின் 11வது அனுபவமையம் இதுவாகும். இந்தியாவின் வேகமான மற்றும் சிறந்த ஸ்கூட்டராக கருதப்படும் ஏதர் 450 எக்ஸ் மற்றும் ஏதர் 450 பிளஸ் ஆகிய மாடல்கள் இந்த புதிய  ஏதர் ஸ்பேஸ் ஷோரூமில் விற்பனை செய்யப்பட உள்ளன. இவற்றை வாடிக்கையாளர்கள் ஓட்டிப் பார்த்து வாங்கலாம்

இந்த புதிய அனுபவமையம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தையும் அவர்களுக்கான முழுமையான சேவையையும் வழங்க இருக்கிறது. நவீன முறையில் தொட்டுணரக்கூடிய மற்றும் ஊடாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அனுபவ மையம் இதன் தயாரிப்புகளின் ஒவ்வொரு சிறப்பு அம்சத்தையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். வாடிக்கையாளர்கள் இந்த அனுபவ மையத்திற்கு வருவதற்கு முன் இந்நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று வாகனங்களின் சோதனை ஓட்டத்திற்கு பதிவு செய்து கொள்ளலாம். தமிழகத்தை பொறுத்த வரை சென்னைக்கு அடுத்து திருச்சியில் திறக்கப்பட்டுள்ள இந்த அனுபவம் மையமானது இந்நிறுவனத்தின் 2வது மையமாகும். 

கோவையில் இந்நிறுவனத்தின் வாகனங்கள் வினியோகம் துவங்கி விட்டது. விரைவில் அங்கும் அனுபவ மையம் திறக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் இந்நிறுவனம் இந்தியா முழுவதும் மும்பை, புனே, ஐதராபாத், கொச்சி, ஆமதாபாத், புதுடெல்லி மற்றும் ஜெய்பூர் உள்ளிட்ட 15 நகரங்களில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி உள்ளது. பேட்டரி சார்ஜ் செய்யும் உள்கட்டமைப்புகளை உருவாக்க முதலீடு செய்துள்ள நிறுவனங்களில் ஏதெர் எனர்ஜி நிறுவனமும் ஒன்றாகும். தற்போது இந்நிறுவனம் திருச்சியில் தில்லைநகர், சிங்காரம் நகர், கன்டோன்மெண்ட், சாலை ரோடு மற்றும் திருவானைக்கோவில் ஆகிய 5 இடங்களில் ஏதர் கிரிட் என்ற பெயரில் வேகமாக சார்ஜ் செய்யும் மையங்களை அமைத்துள்ளது. மேலும் எலக்ட்ரிக் வாகன உரிமையாளர்கள் மென்மையாக மன அழுத்தமும் இல்லாமல் பயணம் மேற்கொள்வதற்கு ஏதுவாக திருச்சியில் மேலும் 8 முதல் 10 இடங்களில் இந்த சார்ஜிங் மையங்களை இந்நிறுவனம் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. 

அத்துடன் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப அவர்களின் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளிலும் சார்ஜிங் மையத்தை இந்நிறுவனம் அமைத்து தருகிறது. இந்நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளில் சென்னையில் மட்டும் 450க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்களில் சார்ஜிங் மையத்தை அமைத்துக் கொடுத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டிற்கு பல்வேறு கொள்கைகளை வகுத்து அதற்கு அதிக ஊக்கம் அளித்து வருகிறது. ஓசூரில் உள்ள இந்நிறுவனத்தின் தொழிற்சாலை தமிழக அரசின் எலக்ட்ரிக் வாகன கொள்கைகளை பின்பற்றி செயல்பட்டு வருகிறது. வலுவான உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்புக்கு உகந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ள இந்நிறுவனத்தின் சப்ளையர் தளத்தின் பெரும்பகுதி தமிழ்நாட்டில் உள்ளது. 

தமிழகத்தில் கடைபிடிக்கப்படும் எலக்ட்ரிக் வாகன கொள்கைகள் மிகவும் சிறப்புமிக்கவையாகும். இவை நாட்டின் எலக்ட்ரிக் வாகன புரட்சிக்கு சிறந்த வழிகாட்டியாக அமையும். எக்ஸ் ஷோரூம் விலை ஏதர் 450எக்ஸ் 1,46,296 ரூபாய்க்கும், ஏதர் 450பிளஸ் 1,27,286 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதர 125சிசி ஸ்கூட்டர்களுடன் ஏதர் 450எக்ஸ் மற்றும் ஏதர் 450பிளஸ் ஸ்கூட்டர்களை ஒப்பிடுகையில், அதன் உரிமையாளர்கள் தங்களின் முதலீட்டை 18 முதல் 24 மாதங்களில் பிரித்து பார்க்கும்போது அதற்கு பிறகு ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் அவர்கள் ஏறத்தாழ 2 ரூபாய் சேமிக்க முடியும். புதிய அனுபவமையம் திறப்பு குறித்து ஏதர் எனர்ஜி நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி ரவ்னீத்போகேலா கூறுகையில், 
எங்களின் புதிய அனுபவமையத்தை அமைப்பதிலும், ஏப்ரல் மாத துவக்கத்தில் இருந்து திருச்சியில் சோதனைஓட்டத்திற்கு ஏற்பாடு செய்வதிலும் எங்களுக்கு ஆதரவளித்த வேலா ஆட்டோமொபைல்ஸ் எங்களுடன் இணைந்து இருப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். 

எங்களுக்கு இங்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. வரும் மாதங்களில் அதிக ஸ்கூட்டர்கள் விற்பனையாக வாய்ப்பு உள்ளது. திருச்சியை பொறுத்தவரை நல்ல திறன்மிக்க எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிக அளவில் உள்ளது. சமீபத்திய விலை குறைப்பு காரணமாக எங்களின் உயர் செயல்திறன் மிக்க ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்கள் எளிதாக வாங்க முடியும். மேலும், பெட்ரோல் விலை உயர்ந்து வருவதால், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவது என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாகும். தற்போது தமிழகத்தை பொறுத்தவரை பெரும்பாலானோர் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

இது குறித்து வேலா ஆட்டோமொபைல்ஸ் இயக்குனர் மணிவண்ணன் கூறுகையில், வேலா ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் காவிரி குழுமத்தின் ஒரு அங்கமாகும். திருச்சியில் ஏதர் நிறுவனத்துடன் நாங்கள் இணைந்திருப்பதில் மிகுந்த பெருமை கொள்கிறோம். இந்தியாவின் விரைவான ஸ்கூட்டர் மற்றும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மிகவும் மேம்பட்ட ஏதர் 450 எக்ஸ் ஸ்கூட்டருடன் எலக்ட்ரிக் வாகன தொழில்துறையை ஏதர்எனர்ஜி நிறுவனம் மறுவரையறை செய்கிறது. திருச்சியில் ஏதர் 450எக்ஸ்ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. வேலா ஆட்டோமொபைல்சில், ஏதர்ஸ்பேஸை அறிமுகப்படுத்துவதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். 

“மோட்டார்  அனுபவத்தை மறுவரையறை செய்தல்” என்னும் எங்களின் தாரக மந்திரமானது எங்கள் பிராண்ட் நெறிமுறைகளை பிரதிபலிக்கிறது. மேலும் “பச்சை நம்பர்பிளேட்டுகளுடன்”நிறைய ஸ்கூட்டர்கள் இயங்குவதை பார்த்து நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். அத்துடன் எங்கள் புதிய அனுபவ மையத்திற்கு வாடிக்கையாளர்களை வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *