திருச்சி காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டி அருகே விறகுபேட்டை பாரதி நகரை சேர்ந்தவர் பாலமுருகன். இவரின் மகன் ஸ்ரீசாம் (13) 8ம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் செயல்படாததால் கடந்த 5ம் தேதி நண்பர்களுடன் சேர்ந்து விளையாட்டாக கூட்டாஞ்சோறு சமைத்து தொடங்கினா்.
இதற்காக அடுப்பை பற்ற வைக்க சானிடைசரை ஊற்றி ஸ்ரீசாம் பற்ற வைக்க முற்பட்டுள்ளான். திடீரென எதிர்பாராத விதமாக பாட்டிலை கையில் வைத்திருந்த ஸ்ரீசாம் உடல் முழுவதும் தீ பற்றியதால் மற்ற சிறுவர்களும், அலறிய சப்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து உடலில் பற்றிய தீயை அணைத்து உள்ளனர்.
பின்னர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
Comments