திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் நாளை கபடிக்குழுவிற்க்கு தகுதி தேர்வு நடைபெற இருக்கின்றது.
பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் தகுதி தேர்வில் கலந்து கொள்ளலாம் அதுமட்டுமின்றி இளங்கலை முடித்த முதுகலை
பயில இருக்கும் மாணவர்களும் தகுதி தேர்வில் கலந்து கொள்ளலாம்.
ஜமால் முஹம்மது கல்லூரி கபடி அணி பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையே பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான கபடி போட்டியில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் வென்றுள்ளது.அந்த அணிகள் பாரதிதாசன் பல்கலைக்கழக அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கபடி வீரர்களும் தகுதி தேர்வில் கலந்துகொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தி அணியில் இடம் பெறலாம் இது குறித்த விவரங்கள் தெரிந்து கொள்வதற்கு 9865664039 என்ற எண்ணில் மாணவர்கள் தொடர்பு கொண்டு தங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
தகுதித் தேர்வு நாளை ஜமால் முகமது கல்லூரி வளாகத்தில் நடைபெறும். தகுதி தேர்வில் பங்கு பெறும் மாணவர்கள் அவர்களுடைய பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்,
கபடி போட்டியில் மாநில மாவட்ட அளவில் இதற்கு முன்பு வெற்றி பெற்று இருந்தால் அதற்குரிய சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
Comments