இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை திருச்சிராப்பள்ளி மாவட்டம் புத்தூரில் இயங்கி வரும் மாவட்ட அரசு தலைமை சித்த மருத்துவமனையில் சக்கரை நோயாளிகளுக்கான சிறப்பு சித்த மருத்துவ முகாமை ஏற்பாடு செய்துள்ளனர்.
சர்க்கரை நோய் அதனால் ஏற்படும் ஆறாத புண், உடல் சோர்வு, உடல் பலவீனம், கை கால் மதமதப்பு, கை, கால் எரிச்சல், அரிப்பு, உடல் எடை குறைதல், இதய மற்றும் சிறுநீரக நோய்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாமில் அளிக்கப்படும் என்று மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர் எஸ்.காமராஜ் தெரிவித்துள்ளார்.
முகமானது ஜூலை மாதம் 12ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி வரை ஒவ்வொரு திங்கட் கிழமைகளிலும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 4 வாரங்களுக்கு நடைபெற இருக்கின்றது. ஆங்கில மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டு இருந்தாலும், சித்த மருத்துவத்தையும் எடுத்துக்கொள்ளலாம். சிகிச்சைக்கு எவ்விதக் கட்டணமுமின்றி இலவசமாக வழங்கப்படும்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
Comments