Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

கலைமாமணி சொல்லின் செல்வர் சோ.சத்தியசீலன்  திருச்சியில் காலமானார். 

பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் சத்தியசீலன் உடல் நலக்குறைவால் நேற்று(09.07.2021) இரவு காலமானார்.
அவருக்கு வயது 88 .1933 ஆம் ஆண்டு பெரம்பலூரிரர் பிறந்த இவர் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேடியோ டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபல பேச்சாளர் மற்றும் நடுவராக இருந்தவர்.

 இவரது திறமையை பாராட்டி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கலைமாமணி விருதும், ஜெயலலிதா சொல்லின் செல்வர் விருது வழங்கி கௌரவித்து உள்ளார்கள்.குன்றக்குடி அடிகளாரால் நாவுக்கரசர் என்ற பட்டம் சூட்டப்பட்ட சத்தியசீலன் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கல்லூரி பேராசிரியர் கல்லூரி முதல்வர் என பல பதவிகளை வைத்துள்ளார். 
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

திருச்சி கம்பன் கழகம் உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர் உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர் திருச்சி மாவட்ட அளவில் நலப்பணி  நிதிக் குழுவின் உறுப்பினராகவும்  இருக்கிறார்.
 இவருக்கு தனபாக்கியம் என்ற மனைவியும் மருத்துவர் சித்ரா என்ற மகளும் உள்ளனர். இவரது இறுதி சடங்கு இன்று மதியம் 2 மணி அளவில் திருச்சி சேதுராமன் பிள்ளை காலனியில் உள்ள அவரது வீட்டில் நடக்கிறது.
slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *