திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.கழகம் சார்பில்
வீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழாவை முன்னிட்டு தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட கழக பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வழிகாட்டுதல்படி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே என் சேகரன் அவர்கள் தலைமையில் மாவட்ட கழக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வீரன் அழகுமுத்துக்கோன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ,கோவிந்தராஜ் அரங்கநாதன், மதிவாணன் மற்றும் மாவட்ட ஒன்றிய பகுதி நகர பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
Comments