திருச்சி மாநகர பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வரும் திருடர்களை பிடிக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவின் படி தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்த நிலையில், நேற்று ஜூலை 11-ஆம் தேதி காலை 10 மணிக்கு உறையூர் குற்ற தனிப்படையினர் புத்தூர் நால் ரோடு அருகில் வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் போலீசாரை கண்டதும் தப்பிக்க முயன்றவர்களை பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்தார்கள். மேலும் விசாரணை நடத்தியதில் செந்தண்ணீர்புரம், அண்ணாநகரைச் சேர்ந்த ராஜா (32) மற்றும் தில்லை நகர், காந்திபுரத்தைச் சேர்ந்த ஆண்டவன் என தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து உறையூர், அரசு மருத்துவமனை, கண்டோன்மென்ட், கே.கே.நகர் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆறு இரு சக்கர வாகனங்களை திருடியதை ஒப்புக் கொண்டுள்ளனர். மேற்படி உறையூர் குற்ற காவல் உதவி ஆய்வாளர் 2 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து மொத்தம் ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தும் எதிரிகளைத் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனையடுத்து இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட எதிரிகளை கைது செய்து அவர்களிடம் இருந்து 2 லட்சம் மதிப்புள்ள 6 இருசக்கர வாகனங்களை கைப்பற்றிய உறையூர் குற்ற தனிப்படையினரை திருச்சி மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாராட்டியுள்ளார்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
Comments