பெருந்தலைவர் காமராஜர் ஐயாவின் 119 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், இனிகோ இருதயராஜ், பழனியாண்டி, மாநகரச் செயலாளர் அன்பழகன் முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன் மாவட்ட துணைச் செயலாளர் விஜயா ஜெயராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
இதே போன்று அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் சார்பில் தென் தமிழக மாநில செயலாளர் செல்வி சுசீலா தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு பெருந்தலைவர் காமராஜ் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்பித்தனர்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
Comments