திருச்சி மாவட்டத்தில் கோவிட் தொற்று காலத்தில் கஞ்சா அதிக அளவில் விற்பனையாவதாக காவல் துறைக்கு தொடர்ந்து தகவல் வந்தது. இதனையடுத்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி உத்தரவின்பேரில் புறநகர் பகுதிகளில் காவல்துறையின் அதிரடி சோதனைகளும் அவ்வப்போது நடைபெற்றது. இச்சோதனையில் கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக மகாமுனி என்ற கஞ்சா வியாபாரி ஒன்றை கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் கஞ்சா வினியோகம் நடந்து வந்த நிலையில் எஸ்பி உத்தரவின் பேரில் தனிப்படை நவல்பட்டு காவல் ஆய்வாளர் வெற்றிவேல் உதவி ஆய்வாளர் செந்தில் உள்ளிட்ட போலீசார் கஞ்சா வியாபாரி நைனா முகமதுவை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே கஞ்சா விற்பனை தொடர்பாக மகாமுனி கைது செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து தற்போது நைனா முகமதுவை கைது செய்து 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
Comments