நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது, திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் தேர்தலின் போது உறுதி அளித்தபடி திமுக பல அறிவிப்புகளை செயல்படுத்தவில்லை என்று அதிமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில் திமுகவை கண்டித்து அதிமுகவினர் தங்கள் வீடுகளுக்கு வெளியே பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்த வேண்டும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான, ஈ.பி.எஸ். ஓ.பி.எஸ் ஆகியோர் கேட்டுக்கொண்டனர். இதன்படி திருச்சியில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் தென்னூர் அண்ணாநகர் பகுதியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கருப்பு சட்டை அணிந்தும், கருப்பு கொடி மற்றும் திமுக ஆட்சியை கண்டித்து வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.
இதே போன்று திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் தில்லைநகர் அலுவலகம் முன்பு புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கு.பா.கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
Comments