ஊடகத் துறையினரை மிரட்டும் சுதந்திரத்தை நசுக்கும் பாசிசத்தை கண்டித்தும், வரவர ராவ், டெல்டும்டே ஆகிய இரண்டு அறிவுத்துறையினரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும், CAA எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும், கொரோனாவால் வாழ்விழந்த மக்களுக்கு பாஜக அரசை பதில் சொல்ல வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மக்கள் அதிகாரம், மக்கள் கலை இலக்கிய கழகம், திராவிட விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு, மக்கள் உரிமை கூட்டணி, மக்கள் உரிமை மீட்பு இயக்கம், தமிழ்ப்புலிகள் கட்சி, தமிழக விவசாயிகள் சங்கம், அமைப்புசாரா தொழிலாளர் இயக்கம், சமூக நீதிப் பேரவை உள்ளிட்ட அமைப்புக்கள் கலந்து கொண்டனர்.
Comments