இன்று (02.08.2021) காலை உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் R ரமேஷ் பாபு தலைமையில் போக்குவரத்து ஆய்வாளர் அருண்குமார் மற்றும் காவல் துறை உதவி ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு இணைந்து திருச்சி சமயபுரம் டோல்கேட் பிளாசாவில் உணவு ஏற்றிகொண்டு வரும் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
சுமார் 3 மணி நேரம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கலப்பட உணவு பொருட்கள் கொண்டு வர படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் தொடர்ந்து கொண்டயம் பேட்டையில் உள்ள தேநீர் கடைகளில் ஆய்வு செய்யப்பட்டதில் சுமார் ஒரு கிலோ கலப்பட டீ தூள் கண்டறியப்பட்டு சட்டபூர்வமான உணவு மாதிரி எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுபாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் காந்தி மார்க்கெட் பகுதியில் ஆய்வு செய்யும் போது டாஸ்மாக் கடை அருகில் 23 குவாட்டர் பாட்டில்களை கள்ளத்தனமாக விற்பனை செய்து கொண்டு இருந்த ஒருவர் பாட்டில்களை போட்டு விட்டு ஒடி விட்டார் அந்த 23 குவாட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு மார்க்கெட் காவல் நிலையத்தில் ஒப்படைக்கபட்டது.
மேலும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களையோ அல்லது கலப்பட உணவு பொருட்களையோ விற்பனை செய்தாலோ உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006 ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த கடை சீல் வைக்கப்பட்டு மூடப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட நியமன அலுவலர் Dr.R. ரமேஷ்பாபு தெரிவித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
Comments