Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

உலகின் முதல் கேமரா கார் திருச்சியில் தயாரிக்கப்பட்டுள்ளது

திருச்சியில் செயல்பட்டு வரும் ஃப்ரீகேட் பொறியியல் நிறுவனம் நம்முடைய   புதுமையான சிந்தனைகளுக்கு உயிர் கொடுக்கும் வகையில் புதுமை நிறைந்த தனித்துவத்தை தருவதில் வல்லமை பெற்றவர்களாக செயல்பட்டு வருகிறார்கள். இவர்களிடம் சிங்கப்பூரில் உள்ள கேமரா அருங்காட்சியகத்தின் முன்னால் நிறுத்துவதற்காக ஓர் கேமரா கார் வடிவமைத்து தரும்படி கேட்ட பொழுது இவர்களுடைய தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் உலகின் முதல் கேமரா கார் நிறுத்தி வைப்பதற்காக மட்டுமில்லாமல் இயக்குவதற்கும் ஏதுவான வகையில் உருவாக்கி அசத்தியுள்ளனர்.

இக்கண்டுபிடிப்பு குறித்து ஃபரிகேட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான தமிழினியன் நம்மோடு கூறுகையில்.. சிங்கப்பூரின் கேமரா அருங்காட்சியகத்தில் இருந்து ஒரு நூற்றாண்டு பழமையான அபூர்வ இரட்டை லென்ஸ் பெல்லோஸ் மரக் கேமராவின் போன்ற ஒன்றை தயாரித்து தரும்படி எங்களை அணுகினர்.

அந்த அருங்காட்சியகத்தில் உள்ள கட்டிடங்கள் கூட கேமராவை பிரதிபலிக்கும் பொழுது இந்த கேமரா கார் அருங்காட்சியகத்தை பலரும் பார்வையிடுவதற்கு ஏதுவான வகையில் அமைத்திட வேண்டும் என்று எங்கள் குழுவினர்களோடு இணைந்து சிந்தித்தோம்.

இதற்கான மாதிரிகளை உருவாக்கி அருங்காட்சியகத்தில் உள்ளவர்களிடம் காட்டிய பொழுது அவர்கள்  மிகவும் பிடித்து போனது. அதனைத் தொடர்ந்து இதனை உருவாக்கும் முழு முயற்சியில் ஈடுபட்டோம் 
இரட்டை லென்ஸ் போன்ற வடிவமைப்பு காரில் அமைக்கப்பட்டு இருந்தாலும் கேமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை.

லென்ஸ் போன்று பொருத்தப்பட்டுள்ள இரண்டு கண்ணாடிகள் மூலமாக காரை ஒருவர் இயக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 2 கேமரா லென்ஸுடன் பொருந்தும் வகையில் கண்ணாடி அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

இந்தத் திட்டம் முழுமை அடைவதற்கு சுமார் எட்டு மாதங்களில் 4.65 லட்சம் செலவில் முடிக்கப்பட்டுள்ளது. சுமார் 30 பணியாளர்கள் இதில் ஈடுபட்டனர். இந்த முழு கேமரா கார்  திருச்சியில் உள்ள உள்ளூர் பணியாளர்களை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டது. கேமராவின் மடிக்கக்கூடிய ரெக்சின் பொருள் இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சில வாரங்களில் கேமராவை ஒரு கன்டெய்னர் மூலம் சென்னை துறைமுகம் வழியாக அனுப்பி வைக்க இருக்கிறது.  
பெட்ரோலால் இயக்கப்படும் வகையில் இவ்வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகின் முதல் கேமரா கார் திருச்சியிலிருந்து வடிவமைக்கப்பட்டுள்ள என்ற பெருமை நிறுவனத்திற்கு கிடைத்ததுள்ளது. திருச்சிக்கும்  பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/GJDm40VrfQc6PgMBZJzYBf

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *