திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மான்பிடிமங்கலம் கீழத் தெருவைச் சேர்ந்த மாணிக்கம் மகன் சக்திவேல் (27). இவரது மனைவி நித்யா (25) இவர்களுக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கமலேஷ் (4) என்ற மகனும், பவ்யஸ்ரீ என்ற 8 மாத கைக்குழந்தையும் உள்ளனர். சக்திவேல் திருச்சியில் உள்ள பனனா லீப் ஹோட்டலில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் வசித்த வீடு பழைய ஓட்டு வீடு என்பதால் நேற்று இரவு பெய்த மழையில் சுவர் ஈரமாக இருந்ததால் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இரவு 8 மணிக்கு மேல் வீட்டின் முன் நின்று கொண்டி பேசிக் கொண்டிருந்த போது திடீரென வீட்டின் சுவர் இடிந்து இவர்கள் மீது விழுந்த்தில் 8 மாத குழந்தை சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். தகவலறிந்து அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த தாய் நித்யாவை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.
வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 11 மாத குழந்தையும் தாயும் பலியானது அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments