பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரை அடுத்து மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் R.ரமேஷ்பாபு உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரெங்கநாதன், வடிவேலு, மகாதேவன் மற்றும் சண்முகசுந்தரம் கொண்ட குழுவால் திருச்சி துறையூர் பகுதியில் 30 கடைகள் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வின் போது ஒரு கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. மேலும் அவர் வீட்டை ஆய்வு செய்தபோது சுமார் 20 கிலோ தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் கைப்பற்றபட்டு வழக்கு தொடுப்பதற்காக 3 சட்டபூர்வ உணவு மாதிரி எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006இன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த கடை சீல் செய்யப்பட்டு மூடப்படும்.
பொதுமக்களும் தமிழக அரசால் தடை செய்யபட்ட அல்லது கலப்பட உணவு பொருட்கள் கண்டறியபட்டால் கீழே கொடுக்கபட்டுள்ள தொலைபேசிக்கு தகவல் கொடுக்கவும் என்று மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் R ரமேஷ் பாபு உணவு பாதுகாப்பு துறை திருச்சிராப்பள்ளி மாவட்டம் தெரிவித்தார். தொலைபேசி எண் : 99 44 95 95 95 / 95 85 95 95 95
மாநில புகார் எண் : 99 44 04 23 22
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments