திருச்சி மத்திய மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் திருச்சியில் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா எ.புதூரில் நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வருகை தர உள்ளார்.
இந்நிலையில் இவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி மாநகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதில் தளபதி ரசிகர்களை புறக்கணிக்கும் மாநிலச் பொதுச்செயலாளரை திருச்சி மாவட்ட தளபதி விஜய் ரசிகர் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். இனி இயக்கத்தின் நடக்கும் தவறை தட்டிக் கேட்போம் என திருச்சி மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் சுவரெட்டியில் குறிப்பிட்டுள்ளனர்.
ஏற்கனவே கடந்த வாரம் திருச்சி மாவட்டத் தலைமை தளபதி விஜய் ரசிகர் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் திருச்சி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற மூத்த நிர்வாகிகள் புறக்கணிக்கப்படுவதாகவும், விஜய் ரசிகர் மன்ற மாநில பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடதக்கது. மேலும் நேற்று திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கருப்பு கொடி ஏந்தி கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments